மாகாணசபை கதிரை கனவுகள்?
மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதேவேளை எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ஆறு கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சந்திப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு திருத்தப்படுவதோடு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என சந்திப்பில் அனுர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன் அவசர திருத்தத்தை விட அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய சமூக ஒப்பந்தத்தை உருவாக்குவதே முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment