கோத்தாவிற்கு காலக்கெடு: ரணில் சந்திப்பு!



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த ஆணைப்பேராணை மனு மீதான தனது உத்தரவை வழங்குவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம்  செப்டம்பர் 22-ஆம் திகதியை திங்கட்கிழமை (03) அன்று நிர்ணயித்துள்ளது. 

அதற்கமைய, இந்த மனுவை முன்னெடுத்துச் செல்வதா அல்லது ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்வதா என்பது குறித்து நீதிமன்றம் செப்டம்பர் 22-ஆம் திகதி தீர்ப்பளிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ச, இன்று கொழும்பில் சந்;தித்து உரையாடியுள்ளனர்.

முன்னதாக கோத்தபாயவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காவற்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சாணி அபேசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments