யாழை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார். 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் முன்னாள் விரிவுரையாளரும் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவருமாவார்.

கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்த நிலையில் ,கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கனடாவில் காலமானார். 

No comments