இலண்டனில் கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி ஆர்ப்பாட்டம்

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேச

நீதியை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டம் இன்று (23) இலண்டனில் உள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street முன்பாக நடைபெற்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் மக்களவை ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு நிலையான அரசியற் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகள் மற்றும் கோரிக்கை வாசகங்களை ஏந்தியபடி, தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும், கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள்.

“தமிழர்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்கள் குரல் ஓயாது.” எனும் உறுதி மொழியோடு போரட்டமானது நிறைவு பெற்றது.



No comments