சான்றுப் பொருளான இரும்பு ஆணி!




செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை 478 மனித எலும்புக்கூடுகள் சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 464 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய அகழாய்வில் மேலும் 3 மனித எலும்புக் குவியல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்;கு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், இன்று இரு பிற சான்றுப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் ஒன்றான இரும்பு ஆணி, ஒரு மனித எலும்புக்கூட்டின் முழங்கால் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனிடையே நேற்றைய தினம் ஜரோப்பிய துர்துக்குழுவினர்; அகழ்வுப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டிருந்தனர். அங்கு களத்தில் பணியாற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் அகழ்வுப் பணிகளின் தொழில்நுட்ப நகர்வுகள் குறித்துத் தூதுவர்கள் உன்னிப்பாகக் கேட்டறிந்தனர் 

இதுவரையான காலப்பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் மொத்தம் 94 நாட்கள் அகழ்வுப் பணிகள் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments