17வது வாரமாக போராட்டம்!
வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் போராட்டத்தை சளைக்காது முன்னெடுத்துவருகின்றனர்.
இலங்கை இராணுவத்தினரின் பலாலி "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 17 ஆவது வாரமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை குடும்பங்கள் முன்னெடுத்துள்ளன.
யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாமல் பூர்வீக நிலங்களை முடக்கி வைத்துள்ளதற்கு எதிராகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போர் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அப்பகுதிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயமாகவே பேணப்பட்டு வருவதுடன், மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவது இராணுவத்தினரால் தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு பல வருடங்களாகப் பல்வேறு மட்டங்களில் கோரிக்கைகள் விடுத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, இன்றைய தினமும் 17 ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment