கணவனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த மனைவி
தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.
தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment