ட்ரோன் பறக்கவிட்ட மன்னார் சிறுவன் அதிரடிக் கைது!
மன்னார் - சௌத்பார் பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட 16 வயது சிறுவன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை உரிய அனுமதியின்றி பறக்கவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து DJI Mini 4 Pro ரக ட்ரோன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment