உண்ணாவிரதத்திற்கு விடுமுறை!
அனுர அரசு கண்டுகொள்ளாத நிலையில் முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் சுரேஸ் சாலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தநிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய சுரேஸ் சாலே சுகவீனம் காரணமாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரைக் கைது செய்திருந்தது.
தனது வழக்கு தொடர்பான விசாரணைகளை மேற்பார்வையிடும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபயசேகர என்பவரை பதவி நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்றம் சுரேஸ் சாலேயின் கோரிக்கைகளை நிராகரித்திருந்த நிலையில் தனது உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடுவதாக தற்போது அறிவித்துள்ளார்.

Post a Comment