வீட்டிற்கு செல்கையில் செங்கோலும் சென்றது?



வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்ய வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு தொடர்பில் வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடகங்களிற்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாநகரசபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பவை காணாமல் போயுள்ளதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் காவல் நிலையத்தில் நேற்று  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டுக்கு அமைய காணொளி கமரா உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த இலங்கை காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் உள்ளிட்ட சிலரை கைது செய்ய நீதிமன்றத்தின் அனுமதியை இன்று புதன்கிழமை கோரி இருந்தனர்.

காவல்துறையினரின் கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்திய வவுனியா நீதவான் நீதிமன்றம் வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் சு.காண்டீபன் உட்பட நான்கு பேரை கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்மையில் வடமாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழு அறிக்கையின் அடிப்படையில் சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வர் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments