அமெரிக்கத் தாக்குதலில் 30 பேர் உரியிரிழப்பு - ஈரான் அறிவிப்பு
கடந்த சில நாட்களில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத் தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்தார்.
தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், ஈரானின் தென்கிழக்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அன்று தங்களது ஏழு வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஈரான்ஷாஹர் நகருக்கு அருகிலுள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் அதன் இராணுவத்தின் கூற்றுகளை சுயாதீனமாக சரிபார்க்க இயலாது.

Post a Comment