சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல்களின்படி, கல்முனையில் இந்து பக்தர்களுடன் கதிர்காமம் நோக்கிப் பயணித்த நாயொன்றை நபரொருவர் எட்டி உதைத்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கடும் விவாதங்கள் எழுந்தன.
அதன் பின்னணியில், அனோஜன் என்ற தமிழர் ஒருவர் மற்றொரு மதத்தின் இறைத்தூதர் குறித்து அவதூறான கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர் பணியாற்றிய நிறுவனம் மற்றும் சவூதி அதிகாரிகளிடம் பல்வேறு தரப்பினரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குறித்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு தொடர்பான தகவலை, அனோஜனின் சகோதரர் உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தச் செய்தி சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சவூதி நீதிமன்றம் அல்லது அந்நாட்டு அதிகாரிகள் இதுகுறித்து உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளதா என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Post a Comment