திருக்கோவிலில் விபத்து: பெண் உயிரிழப்பு: 4 பேர் படுகாயம்!


திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் சிறுவர் உட்பட நான் பேர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று (27) திங்கட்கிழமை  இடம்பெற்றுள்ளதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவு ச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டியில் இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் சம்பவ தினமான நேற்று காலையில் அம்பாறைக்கு செல்வதற்காக சென்றுள்ள நிலையில் சாரதி வீதியை மாறி பொத்துவில் நோக்கி பிரயாணித்த போது விநாயகபுரம் வீதி வளைவில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதி பாதுகாப்புக்கு அமைத்த தூணில் மோதி விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் சாரதி மற்றும் இரு சிறுவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments