ஈரான் தாக்குதலால் குவைத்தில் உள்ள மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்தது
ஈரானியத் தாக்குதலில் மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு, பெருமளவிலான மின் உற்பத்தி அலகுகள் சேதமடைந்ததாக குவைத்தின் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனை அணைத்துவிட்டதாக குவைத் அரசாங்கம் கூறியுள்ளது.
குவைத்தின் நீர் விநியோகத்தில் சுமார் 90 சதவீதம் கடல்நீரை குடிநீராக்குவதன் மூலம் பெறப்படுகிறது.
நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு குவைத் அதிகாரிகள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
போரின் போது ஈரான், குவைத் சர்வதேச விமான நிலையம் போன்ற பிற பொது உள்கட்டமைப்புகளுடன், குவைத்தின் மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் முன்னதாகக் குறிவைத்துள்ளது.

Post a Comment