சாலேயிற்கு விடுதலை இல்லை!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதிகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளதால் அவர் தற்போது வெளியே செல்வது சாத்தியமற்றதாக்கியுள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் இடையீட்டு மனுக்கள் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதையோ அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்படுவதையோ தடுக்குமாறு கோரி சுரேஸ் சலே மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவுக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும்,ஆதரவாக பெங்கமுவே நாலக தேரர் மற்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உட்பட 8 தரப்பினர் இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தலைமை நீதியரசர் தலைமையிலான மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் மனுக்கள் இன்று (ஜூலை 17) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இடையீட்டு மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் ஒகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment