நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை ; மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு!


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த மோதலில் காயமடைந்த சில சிறைக்கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments