மன்னார் நகரசபைக்கும் விசாரணை?
வவுனியா மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை தொடர்ந்து மன்னார் நகர சபையின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி கந்தையா அரியநாயகம்; தலைமையிலான தனிநபர் விசாரணை சபை வடக்கு ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது விளையாட்டு மைதான மதில் அகற்றப்பட்டமை மற்றும் வாய்க்கால் வேலைகள் தொடர்பான கோவைகளை பரிசோதிக்க வந்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக ஆய்வு உத்தியோகத்தரை, தவிசாளர் ஆவணங்களை பார்க்க அனுமதிக்காது சபையிலிருந்து வெளியேற்றியமை. தேசிய கணக்காய்வு அலுவலகம் வழங்கிய அவதானிப்புகளுக்குப் பதிலளிக்காமல், தவிசாளரால் அந்த அறிக்கை கிழிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை.
மன்னார் நகர சபைக்கு சொந்தமில்லாத ' மாட்டிறைச்சி கடைக்கு' பகிரங்க கேள்வி கோரியமை.
கோரமில்லாமலும், தவிசாளர் சமூகமளிக்காத நிலையிலும் சட்டவிரோதமாக சபைக்கூட்டங்களை நடத்தியதோடு, தவிசாளர் கையொப்பமிட்டுள்ளமையென பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் இருவரும் தனி நபர் விசாரணை அறிக்கையின் பிரகாரம் பதவிகளை இழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment