நீதிமன்ற படியேறினார் கோத்தபாய!





ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளிற்காக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீதிமன்ற படியேறியுள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்கும்படி கோரியே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனுவை, மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மனு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரியே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

கடந்த 9ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை நான்காவது நாளாகப் பரிசீலித்து, அதை இன்றைய தினத்திற்கு வரை ஒத்திவைத்திருந்தது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதியும் கோத்தபாய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்சவும் சட்டத்தரணி உடையில் நீதிமன்றில் தோன்றியிருந்தார்.


No comments