செம்மணிக்குள் மழை அங்கியுடன் மீட்கப்பட்ட என்புக்கூடு சட்ட ரீதியாக புதைக்கப்பட்டதா ??
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் காணப்படும் என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழிக்குள் அடையாளம் காணப்பட்ட 467-வது என்புக்கூடு இதுவரை காணப்படாத வித்தியாசமான முறையில் அது காணப்படுகின்றது.
அதற்கான சவப்பெட்டியின் அடையாளமும், அதேநேரம் அந்த என்புக்கூட்டில் மழைக்காலத்துக்கு பாவிப்பதற்கான மழை அங்கி ஒன்றும் கால் என்பு பகுதியில் காலுறை ஒன்றும் காணப்படுகிறது.
அதனால், அது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஐயமும் இருக்கின்றது. நீதிமன்றம் இது சம்பந்தமாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
அந்தவகையில் மழை அங்கியுடன் காணப்படும் என்புக்கூடு ஒரு வித்தியாசமான முறையில் காணப்படுவதால் இது சட்டரீதியாக புதைக்கப்பட்டதா என்ற ஒரு சந்தேகம் இருக்கின்றது.
இது சம்பந்தமாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை தெளிவாக சொல்ல முடியும் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment