கன்னியா வெந்நீர் ஊற்று:புத்தர் வருகின்றார்!
திருகோணமலையில் அமைந்துள்ளதும் இந்துக்களினது புனித பூமியென அடையாளங்காணப்பட்டுள்ளதுமான கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று, தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகிறது.
அப்பகுதியில் சிவன் ஆலயம், பிள்ளையார் ஆலயம் என்பன இருந்ததுடன், முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் புனிதத் தலமாகவும் அது நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிங்களவர்களின் ஆக்கிரமிப்பினுள் சிக்கியுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
ஏற்கனவே திருகோணமலையினை சிங்கள பௌத்தமயமாக்கல் முழு அளவில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment