நயினாதீவு மீனவர்களும் போராட்டத்தில்!
தமிழக மீனவர்களது அத்துமீறல் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாண கடற்றொழிலாளர் சங்கங்களது போராட்டங்களின் தொடர்ச்சியாக நயினாதீவு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் மற்றும் அதனை கட்டுப்படுத்த கோரியும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நயினாதீவுக்கும் குறிகாட்டுவனுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் படகுகளில் எதிர்வரும் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவை மடி படகுகளில் தொடர்ச்சியாக மனிதாபிமானமற்ற முறையில் எல்லை தாண்டி கடல் வளக் கொள்ளையில் ஈடுபடுவதுடன் தீவக மற்றும் வடக்கு கடற்தொழிலாளர்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான வலைகள் மற்றும் கடற்தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்படுகின்றன.
அவ்வகையில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்திய இழுவை படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கடற்றொழில் சங்க பிரதிநிதிகள், கடற்றொழில் சங்கங்களின் சாமாச பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் இணையம் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் வலுசேர்க்க வியாழக்கிழமை குறிகட்டுவான் பகுதியில் ஒன்று சேரவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

Post a Comment