கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: 2 பேர் பலி! 7 பேர் காயம்!
தென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் வி.டி. சதீசன் கூற்றுப்படி, வயநாடு மாவட்டம் கல்லடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து சதீசன் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தினார்.
வருவாய் அமைச்சர் ஏ.பி. அனில் குமார் மற்றும் வேளாண் அமைச்சர் டி. சித்திக் ஆகியோர் உடனடியாக வயநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது இயற்கையான நிலச்சரிவு அல்ல என்றும் அறிவியல் பூர்வமற்ற முறையில் அங்கு சேறு குவிந்ததால், இந்த பேரழிவு மனிதனால் உருவாக்கப்பட்டதாகும் என்று சம்பவ இடத்தில் இருந்த வேளாண்மைத் துறை அமைச்சர் டி. சித்திக் கூறினார்.
கடந்த 24 மணி நேரமாக அப்பகுதியில் இடைவிடாத மழை பெய்து வருவதால், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

Post a Comment