அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்!


நேற்றிரவு அமெரிக்கத் தாக்குதலில் மூவர் காயம் காயமடைந்ததாக ஈரான் அறிவித்துள்ளது.

முடங்கியுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இஸ்லாமியக் குடியரசு விலை கொடுக்க நேரிடும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா வியாழக்கிழமை அதிகாலை ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியது.

ஈரான் தனது பிராந்திய அண்டை நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஈரானின் புதிய தாக்குதல்கள் காரணமாக குவைத் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியது. பின்னர் திறந்துள்ளது.

ஜோர்டானிய வான்வெளியில் ஏவுகணைகள் இருப்பதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் "பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு" எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் சுமார் 20 இடங்கள் மீது அமெரிக்கா ஒரே இரவில் தாக்குதல்களை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானின் தெஹ்ரான் மாகாணத்தில், வியாழக்கிழமை அதிகாலை வரை அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவசர மருத்துவ சேவைகளை மேற்கோள் காட்டி மெஹர் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் இரண்டாவது கட்டத் தாக்குதல்களில், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

No comments