ஈரான் மீதான தங்காப்புத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டுவிட்டன - அமெரிக்க இராணுவம்
ஈரான் மீதான தனது சமீபத்திய தற்காப்புதாக்குதல்கள் முடிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
சென்ட்காம் படைகள் ஈரான் முழுவதும் உள்ள ஈரானிய இராணுவத்தின் கண்காணிப்புத் திறன்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்தன. அமெரிக்கப் படைகளுக்கும், பிராந்திய கடல்வழிப் பாதையில் பயணிக்கும் சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த ஈரானிய இலக்குகள் மீது, அமெரிக்க மரைன் கார்ப்ஸ், விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகள் துல்லியமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தின என்று இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (சென்ட்காம்) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது.
ஈரானின் நியாயமற்ற மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கை மேலும் கூறியது. அமெரிக்கப் படைகள் விழிப்புடனும், தாக்குதல் திறனுடனும், தயார் நிலையிலும் உள்ளன.

Post a Comment