ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுவிட்டதாக ஈரான் அறிவிப்பு: அதை மறுக்கிறது அமெரிக்கா
சமீபத்திய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பின்னர் ஹோர்முஸ் நீரிணையை தற்போது முழுமையாக மூடப்பட்டுவிட்டதாக ஈரானின் உயர்மட்ட இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கடல்வழிப்பாதையைக் கடக்க முயலும் எந்தக் கப்பலும் தாக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளது.
ஈரான் இராணுவத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற இரண்டு விதிமீறல் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்தக் கூற்றை நிராகரித்த அமெரிக்கா, இன்று இரவும் வணிகக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்திக்குள் தொடர்ந்து சென்று வருகின்றன என்று கூறியது.

Post a Comment