செம்மணி அகழ்வு இடைநிறுத்தம்!
செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 412 மனித எலும்புக்கூடுகள் இலக்கமிடப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேலதிக மனித எலும்புக்கூடுகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. அகழாய்வுக் குழுவினருக்கான ஓய்வுகாலத்தை முன்னிட்டு செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பணிகள் மீண்டும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி தொடங்கவுள்ளன.
இன்றுவரை நடைபெற்ற மூன்று கட்டங்களின் அகழாய்வுகளிலும் மொத்தமாக 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment