பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி! 20,000 பேர் இடம்பெயர்வு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயடைந்தனர். கிட்டத்தட்ட 20,000 பேரை இடம்பெயரச் செய்துள்ளது.
இன்ற செவ்வாய்க்கிழமையன்று ஜெனரல் சாண்டோஸ் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேதமடைந்த மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தங்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர் .
மின்டானோவின் தெற்கு மாகாணங்களில் அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி இன்னும் நான்கு பேர் மட்டுமே காணாமல் போனவர்களாகக் கருதப்படுவதாக குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இடிந்து விழுந்த மற்றும் பலத்த சேதமடைந்த பல கட்டிடங்களில், உயிருடன் இருப்பவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் யாரேனும் உள்ளார்களா என்பதைக் கண்டறிய இன்னும் முழுமையான தேடுதல் பணிகள் தேவைப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட உதவுவதற்காக, ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் மணிலாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் தணிப்பு அதிகாரிகளை அனுப்பினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களை விநியோகிக்க உதவுவது, பாலங்கள், சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவது ஆகிய பொறுப்புகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

Post a Comment