100 டன் போதைப்பொருள் கலக்கப்பட்ட மரக்கட்டைகளை சிலி பறிமுதல் செய்தது
சிலி தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளது. ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்த, பெரும்பாலும் கோகோயின் மற்றும் கெட்டமைன் போன்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் கலக்கப்பட்டிருந்த சுமார் 1,080 டன் மரக்கட்டைகள் கண்டுபிடித்தது.
மரக்கட்டைகள் அனுப்பப்பட்டபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 டன்களுக்கும் அதிகமான போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக சிலி அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அரிகா, சான் அன்டோனியோ மற்றும் வால்பரைசோ துறைமுகங்களில், சுமார் 100 டன் சட்டவிரோத போதைப்பொருட்கள் கலந்திருந்த மொத்தம் 1,080.8 டன் மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலி சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு அதன் சேருமிடங்களைச் சென்றடைந்திருந்தால், சிறப்பு ஆய்வகங்களில் மேம்பட்ட வேதியியல் செயல்முறைகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை மீட்க வேண்டியிருக்கும் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
அந்த மரக்கட்டைகள் ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment