த்தாலி 15 நகரங்களில் கடும் வெப்ப எச்சரிக்கை விடுப்பு: பாஸ்தா சாப்பிடவும் பரிந்துரை!!
இத்தாலியின் சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை 15 நகரங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்தது.
ரோம், மிலன், டுரின் மற்றும் வெனிஸ் உள்ளிட்ட நகரங்கள் , தேசிய வெப்ப அலை எச்சரிக்கையில் நிலை 3 சிவப்புப் புள்ளிக்கு உள்ளாயின .
சிவப்பு எச்சரிக்கையின் போது இத்தாலிய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளில், குளிரூட்டப்பட்ட பொது இடங்களில் நேரத்தைச் செலவிடுதல், நேரடி சூரிய ஒளி மற்றும் கடினமான வெளிப்புற உடல் செயல்பாடுகளைத் தவிர்த்தல், அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துதல், மற்றும் இலகுவாகச் சாப்பிடுதல் ஆகியவை அடங்கும். குறிப்பாக இறைச்சி போன்ற கனமான உணவு வகைகளுக்குப் பதிலாக பாஸ்தா மற்றும் மீன் போன்றவை வெளிப்படையாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
வெப்பமான வானிலை குறைந்தபட்சம் இன்னும் ஒரு நாளுக்காவது தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், புதன்கிழமை அன்று 16 நகரங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment