மியான்மர் வெடிமருந்துச் சேமிப்புக் கிடங்கு வெடிவிபத்தில் 40 பேர் பலி!


மியான்மரின் வடகிழக்குப் பகுதியில் , சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 55 பேர் உயிரிழந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில்  25 பேர் பெண்கள். 30 பேர் ஆண்கள் அடங்குகின்றனர்.

மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தபடி, சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

சீன எல்லையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் (இரண்டு மைல்) தெற்கே உள்ள நம்காம் டவுன்ஷிப்பில் உள்ள காங்டுப் கிராமத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்தது.

இப்பகுதி, மியான்மரின் மத்திய அரசுக்கு எதிராக அவ்வப்போது போராடி வரும் இனக் கிளர்ச்சிக் குழுவான தா'ஆங் தேசிய விடுதலை இராணுவத்தின் (டி.என்.எல்.ஏ) கட்டுப்பாட்டில் உள்ளது.

No comments