இத்தாலியின் புகழ்பெற்ற வெஸ்பா ஸ்கூட்டரின் 80வது ஆண்டு விழாவை ரோம் கொண்டாடுகிறது.


வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான வெஸ்பா ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் திரண்டனர். 

குளவி இடுப்பு போன்ற அந்த ஸ்கூட்டர், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியின் மறுபிறப்பின் சின்னமாக விளங்கியது.

வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக , உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சனிக்கிழமையன்று ரோம் நகரில் அணிவகுத்துச் சென்றனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இத்தாலியின் பிறப்பு மற்றும் வளர்ச்சியுடன் இணைந்திருக்கும் வெஸ்பாவின் வரலாறு, ஒரு வகையில் நமது வரலாற்றின் நமது கலாச்சாரத்தின் ஒரு சின்னமாகும்  என்று இத்தாலிய தலைநகரின் மேயர் ராபர்டோ குவால்தியேரி கூறினார்.

மலிவு விலைப் போக்குவரத்துச் சாதனமாக வடிவமைக்கப்பட்ட, இத்தாலிய மொழியில் 'குளவி' என்று பொருள்படும் வெஸ்பா, ஒரு முன்னணி விமான உற்பத்தியாளரான பியாஜியோவால் 1946-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1953-ஆம் ஆண்டின் காதல் நகைச்சுவைத் திரைப்படமான "ரோமன் ஹாலிடே" மற்றும் 1960-ஆம் ஆண்டின் நாடகத் திரைப்படமான "லா டோல்ஸ் விட்டா" போன்ற கிளாசிக் திரைப்படங்களில் வெஸ்பாக்கள் இடம்பெற்றன. அதன் மூலம் உலகின் பட்டிதொட்டியேல்லாம் தெரியவந்தது.

புகழ்பெற்ற அந்த ஸ்கூட்டர், 'தி டேலண்டட் மிஸ்டர் ரிப்லி' மற்றும் சமீபத்தில் வெளியான 'லூகா' என்ற அனிமேஷன் திரைப்படம் உள்ளிட்ட பிற திரைப்படங்களிலும் இடம்பெற்றது.

நான்கு நாள் கொண்டாட்டங்கள், வியாழக்கிழமை அன்று வடக்கு ரோமில் உள்ள ஃபோரோ இட்டாலிக்கோவில் "வெஸ்பா கிராமம்" திறப்பு விழாவுடன் தொடங்கின.

சனிக்கிழமையன்று, ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் அதிவேகமாகச் சென்றதோடு இது உச்சக்கட்டத்தை அடைந்தது.

வெஸ்பா 80 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக உற்பத்தியில் இருந்து வருகிறது, தற்போது சுமார் 100 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

1946-ஆம் ஆண்டு முதல் இன்று வரை, வெஸ்பா ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியுள்ளது நாங்கள் 20 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்யும் தருவாயில் இருக்கிறோம் என்று பியாஜியோ குழுமத்தின் நிர்வாகத் தலைவர் மேட்டியோ கொலானினோ கூறினார். 

No comments