சிட்னி கடற்கரையில் சுறா தாக்கியதில் பெண் படுகாயம்


ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக நிகழும் சுறா தாக்குதல்களின் சமீபத்திய நிகழ்வாக, சிட்னியின் கிழக்குப் பகுதியில் உள்ள கடற்கரையில் சுறா கடித்ததில் பெண் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.

நேற்று சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்குச் சற்றுப் பின்னர் (0100 GMT) கூஜி கடற்கரையில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர மருத்துவ சேவைகள் வருவதற்கு முன்பே, பொதுமக்கள் அந்தப் பெண்ணை நீரிலிருந்து வெளியே இழுத்து முதலுதவி அளித்தனர் என்று காவல்துறை கூறியது.

அவரது கால் மற்றும் கைகளில் பெரிய சதைக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றுக்கு விரிவான அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் ஆம்புலன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, கூஜி கடற்கரை மற்றும் அருகிலுள்ள பல கடற்கரைகளை அதிகாரிகள் மூடினர். 

சுறாக்களைக் கண்காணிக்கும் ஹெலிகாப்டர் ஒன்று கடற்கரைக்கு மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், அந்த வேட்டையாடும் விலங்கின் எந்தவொரு அறிகுறியையும் கண்டறிய கடற்பரப்பில் ரோந்து செல்வதற்காக ஜெட் ஸ்கிக்கள் அனுப்பப்பட்டன. 

No comments