வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 164 பேர் உயிரிழப்பு! 1000 போ் காயம்!
வெனிசுலாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத்
தொடர்ந்து, தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாடு முழுவதும் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும் கிட்டத்தட்ட 1,000 பேர் காயமடைந்தனர்.இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது இதுவரை பேர் உயிரிழந்ததோடு, 1000 பேர் வரை காயமடைந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
கராகஸுக்கு மேற்கே 168 கி.மீ (104 மைல்கள்) தொலைவில் உள்ள மோரோனுக்கு மேற்கே முதல் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. ஒரு நிமிடம் கழித்து, அதே பகுதிக்கு அருகில் இரண்டாவது 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிக உயிரிழப்புகளும், விரிவான சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பேரழிவு பரவலாக இருக்கலாம் என்றும் USGS எச்சரித்துள்ளது.
வெனிசுலாவுக்குத் தேவைப்படும் எந்த உதவியையும் அனுப்பத் தயாராக இருப்பதாக சீனா வியாழக்கிழமை தெரிவித்தது.
வெனிசுலா தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப, தன்னால் இயன்ற உதவியை உரிய முறையில் வழங்க சீனா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்தார்.
தற்போது சீனக் குடிமக்கள் மத்தியில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, வியாழக்கிழமை அன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், வெனிசுலா மக்களுக்கு அமெரிக்காவின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, அங்கு ஏற்பட்ட பயங்கர இரட்டை நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உடனடி உதவிகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Post a Comment