விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி - பிணையில் வெளியே வந்த சொல்லிசை பாடகர் ஊடகங்களுக்கு கருத்து


எனது விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் என சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீத்சன் தெரிவித்துள்ளார். 

எழுச்சி பாடல்களை பாடினார் எனும் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது , தண்டனை சட்டக்கோவை பிரிவின் கீழ் வழக்கினை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு சட்டமா அதிபர் பணித்திருந்தார். 

இந்நிலையில் , குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அழைத்த போது , சட்டத்தரணிகளின் பிணை விண்ணப்பத்தை அடுத்து பாடகர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

பிணையில் விடுதலையாகிய பின்னர் , ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

என்னை பிணையில் விடுதலை செய்துள்ளார்கள். எனது விடுதலைக்காக குரல் கொடுத்த மக்களுக்கும் ,  ஜனாதிபதிக்கும் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் 

No comments