மேலும் புதிய என்புக்கூடுகள்!





செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மேலும் 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் இதுவரையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 334 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 353 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்படுள்ளன. அவற்றில் 334 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக வெளியெ அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments