மொனாக்கோவில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உக்ரேனிய கோடீஸ்வரர் காயமடைந்தார்


மொனாக்கோவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில்  குண்டு வெடித்ததில், செல்வந்த உக்ரேனிய தொழிலதிபர் வதிம் யெர்மோலாயேவ் மற்றும் மேலும் இருவர் காயமடைந்ததை அடுத்து, தெற்கு பிரான்சில் அவர்களைத் தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.

காயமடைந்தவர்களில் இருவர் பிரான்சின் நைஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், ஒரு பெண் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் மொனாக்கோ அரசு வழக்கறிஞர் ஸ்டெஃபான் திபால்ட் தெரிவித்தார்.

அதிகாரிகள் ஒரே ஒரு சந்தேக நபரைத் தேடி வருவதாகவும், திங்கள்கிழமை மாலை நடந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படாமல், கொலை முயற்சியாகவே கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

பிரான்சில் உக்ரைன் தூதரகம், மொனாக்கோ அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெடிவிபத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் நபர்களை அதிகாரப்பூர்வமாக காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் எல்லையருகே, ரூ ரெவெரெண்ட் பெர் லூயி ஃப்ரோலா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில், இரவு 21:00 மணிக்கு (ஜிஎம்டி 19:00) சற்று முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்த கோடீஸ்வரர் உக்ரைன் அதிபருடன் முரண்பட்ட நிலையில் உக்ரைன் அதிபர் இவருக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்திருந்த நிலையில் மொனோக்கோவுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இவரை கொலை செய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டது.

No comments