பெட்டி வாங்கிய விவகாரம்:கட்சிக்குள் பிளவு!
பாதாள உலகக் கும்பலிடம் இருந்து இலஞ்சம் வாங்கியமை தொடர்பான சட்டத்தரணிகள் மற்றும் கட்சி தலைவர்களது கைதுகள் சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது.
வழக்கில் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
சரித் அபேசிங்க மீது ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவர் இங்கிலாந்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்பதை அறிந்திருந்தும், அவரை கட்சியுடன் இணைக்க உதவியதாகக் கூறப்படும் நபர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை விசாரணைகளை நடத்துமாறு கட்சியின் மூத்த தலைவர்கள் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரித் அபேசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் இணைக்கும் முயற்சியை, கட்சியுடன் பணியாற்றும் ஒரு தொழிலதிபர்தான் எடுத்ததாக அதன் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Post a Comment