அணையா விளக்கு திடலில் ஏற்றப்பட்ட உரிமைப்பந்தம்
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது
அதன் போது, அணையாவிளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணிகளில் இதுவரையில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 1999ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, மீட்கப்பட்ட 15 என்பு கூடுகளுமாக 427 என்பு கூடுகளை நினைவுறுத்தி , 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டன





Post a Comment