பாடினால் பயங்கரவாதமா ? - கிளிநொச்சியில் போராட்டம்


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்றைய தினம் சனிக்கிழமை  கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய கருத்துக்களைக் கொண்ட பாடலைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சங்கீர்த்தனன் எனும் சொல்லிசை பாடகர் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், "குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கவனயீர்ப்புப் போராட்டம் இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெற்றது

இந்தப் போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, சங்கீர்த்தனனின் விடுதலையையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார் 







No comments