ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்! பத்து பேர் காயம்! ஐவரைக் காணவில்லை!
நேற்று இரவு ஈரான் கொடி ஏந்திய வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கக் கடற்படை நடத்திய தாக்குதலில் பத்து மாலுமிகள் காயமடைந்ததாகவும், மேலும் ஐந்து பேரைக் காணவில்லை என்றும் ஈரானின் பகுதி அரசு செய்தி நிறுவனமான மெஹர் தெரிவித்துள்ளது.
ஓமானில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் மக்ரான் கடல் பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. மினாப் கவுண்டி கடல் பகுதிக்கு அருகே சென்ற ஒரு சரக்குக் கப்பல் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
இந்த சரக்குப் படகில் மொத்தம் 15 மாலுமிகள் இருந்ததாகவும், அவர்களில் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மெஹர் செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளையில், உள்ளூர் குழுக்களும் தேடுதல் குழுக்களும் மற்ற மாலுமிகளின் நிலையை அறிய முயன்று வருகின்றன.

Post a Comment