அமெரிக்காவின் போர்க்கப்பலைத் தாக்கியது - ஈரான்?


ஹார்முஸ் ஜலசந்திக்கு தென்கிழக்கே, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து அந்தக் கப்பல் வந்த வழியே பின்வாங்கி சென்றதாகவும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் உருவானது.

ஆனால் இந்த தகவலை அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது. பாரசீக வளைகுடாவிற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதை வழிநடத்தவும், ஈரானின் அனுமதியை பெறாத கப்பல்கள் மீது அந்த நாடு விதித்துள்ள முற்றுகையை அகற்றவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

No comments