மட்டக்களப்பு தீ விபத்தில் உயிரிழந்த சிறுவர்களை யாசகம் பெறவே தந்தை அழைத்து வந்தார்
மட்டக்களப்பில் விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , சகோதரர்களான இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து , சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவிக்கு புற்று நோய் எனவும் , அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறி மட்டக்களப்பில் உள்ள தனியார் தங்குமிட விடுதியில் அறை ஒன்றினை வாடகைக்கு பெற்று , 5 வயது பெண் பிள்ளை மற்றும் 3 வயது ஆண் பிள்ளை ஆகிய இரு பிள்ளைகளுடன் தங்கியிருந்துள்ளார்.
அதன் போது, பிள்ளைகள் இருவரையும் அறையில் வைத்து பூட்டி விட்டு , தந்தை மது அருந்த சென்ற சமயம் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தந்தையின் அடையாள அட்டையில் சந்தேகம் ஏற்பட்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த அடையாள அட்டையானது கடந்த 2023ஆம் ஆண்டு கால பகுதியில் பதுளையை சேர்ந்த நபர் ஒருவர் தவறவிட்டது என்பதனை பொலிஸார் கண்டறிந்துளள்னர்
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வேளை , சிறுவர்களின் தந்தை அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவரது மனைவிக்கு எந்த நோயும் இல்லாமல் மாத்தறையில் வசித்து வருவதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்
அத்துடன் ,தனது மனைவிக்கு புற்றுநோய் என பொய் கூறி பிள்ளைகளை வைத்து யாசகம் பெற்று வந்ததனையும் , அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் உள்ளதுடன் , பிடியாணை ஒன்றும் காணப்படுவதனையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்
இந்நிலையில் கைதான நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment