கரவெட்டியில் குடைச்சல்!





வடகிழக்கில் தமிழ் கட்சிகள் வசமுள்ள உள்ளுராட்சி மனற்ஙகளிற்கு எதிராக தேசிய மக்கள் சகத்தி தனது முகவர்கள் ஊடாக குடைச்சல்களை வழங்கியே வருகின்றனர்.  இந்நிலையில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர், அவருக்கு துணையாக செயற்பட்ட செயலாளர் ஆகியோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை தேசிய மக்கள் சக்தியால் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சி ஆதரவு தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே வருமானப்பரிசோதகர் தமது உறுப்பினரை நிர்ப்பந்தித்து வெளியேற்ற முற்பட்டதாக தேசிய மக்கள் சக்தி தரப்பில் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.

தொடர்புடைய  வாதப்பிரதிவாதங்கள் தவிசாளர் மற்றும் செயலாளர் முன்னிலையிலேயே இடம்பெற்ற போதிலும், அவர்கள் மௌனம் காத்தமை உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முறைப்பாடுகள்: குறித்த அநீதிக்கு எதிராக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வடக்கு மாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாட்டினை செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தியுள்ளது.

சட்டத்திற்குப் புறம்பாகச் செயற்பட்ட உத்தியோகத்தர் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனப் பாதிக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.


No comments