கொரியர்" சேவையூடாக போதைப்பொருள்?




யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ் போதை ஒழிப்பு பொலிசாரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

"கொரியர்" சேவையூடாக  கொழும்பிலிருந்து பொதிசெய்யப்பட்டு யாழ் குருநகர் பகுதியில் இருக்கும் தபால்  நிலையத்திற்கு வந்த பொதியை  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழுப்பு பிரிவினர் கைபற்றி சோதனையிட்ட போதே குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

நடவடிக்கையின் போது சுமார் 1800 போதை மாத்திரைகள்  கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறித்த மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments