ரணில் பாணியில் அனுர!



முன்னைய ரணில் அரசினை தொடர்ந்து பூநகரி - கிராஞ்சி பகுதியில் கனிய வளங்களை சூறையா தேசிய மக்கள் சக்தியும் களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பூநகரி - கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி,வலைப்பாடு பிரதேச  மக்கள் மற்றும் பொது அமைப்புக்களால் இன்று (28.05.2026) போராட்டம் முன்னெடுக்கப்படடுள்ளது.

இலங்கையில் காற்றாலை, கனிம மணல் அகழ்வு போன்ற திட்டங்களினால் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் மண்வளம் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த கால அரசாங்கங்கள் செய்ததையே அனுர அரசாங்கமும் செய்கின்றது, கடந்த கால அரசாங்கங்கள் இனங்கண்ட இடங்களில் தான் கனிம மண் அகழ்வு, காற்றாலைத் திட்டம் போன்றவற்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்கின்றது.

அவ்வாறான திட்டங்களினால் மக்கள் வெகுவாக பாதிப்படைகின்றனர். அவ்வாறான அபிவிருத்தி திட்டங்கள் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், குடியேற்றத்தையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.

கிட்டத்தட்ட கிராஞ்சிப் பகுதியில் 8,000 தென்னைகளை அழித்து ஒரு அபிவிருத்தி நடக்கின்றது. அவ்வாறான ஒரு அபிவிருத்தி எமக்கு தேவையில்லை.

மக்களினுடைய வளம், நிலம் சுரண்டப்படுவதை அனுமதிக்கப்படுகின்றது.

கிராமத்தினுடைய வளத்தையும், வாழ்வாதாரத்தையும் பேணிப் பாதுகாக்கும் முகமாகவே கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் அரசியல் வாதிகள், மதத் தலைவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments