பாலங்களையும், மின் உற்பத்தி நிலையங்களையும் தாக்குவோம் - டிரமப் எச்சரிக்கை


ஈரானில் எஞ்சியிருப்பவற்றை அழிக்கும் பணியை அமெரிக்க இராணுவம் இன்னும் தொடங்கவே இல்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அடுத்து பாலங்கள், பின்னர் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் தனது சோசஸ் மீடியாவில் எழுத்தினார்.

தெஹ்ரானையும் கராஜ் நகரையும் இணைக்கும் பி1 பாலத்தை அமெரிக்கத் தாக்குதல் நடத்தி அழித்தது. இத்தாக்குதல் நடத்திய ஒரு நாள் கழித்து அவரது இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என அமெரிக்க சட்ட வல்லுநர்கள் இந்த வாரம் எச்சரித்துள்ளனர். 

ஈரானியத் தலைமைக்கு என்ன செய்ய வேண்டும், அதை விரைவாகச் செய்ய வேண்டும் என்பது தெரியும் என்றும் ட்ரம்பின் பதிவில் கூறப்பட்டிருந்தது.

போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தனது கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்காவிட்டால், அதன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதாக டிரம்ப் பலமுறை அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தனது பதிலடித் தாக்குதல்களைத் தொடரப்போவதாக தெஹ்ரான் சூளுரைத்துள்ளது.

No comments