இலங்கையால் மீட்கப்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பினர்


இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர ராய்ட்டர்ஸ் மற்றும் ஏஎஃப்பி செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்தார். 

மார்ச் 4 அன்று இந்தியப் பெருங்கடலில் இருந்தபோது, ​​ஐரிஸ் தேனா நீர்மூழ்கிக் கப்பல் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் தேனாவில் இருந்த 104 கடற்படையினர் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில்,  ஈரானியக் கப்பல்கள் இந்தியா ஏற்பாடு செய்திருந்த கடற்படைப் பயிற்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தன.

தாக்கப்பட்ட 'தேனா' கப்பலில் இருந்த 32 ஈரானியக் கடற்படையினர் இலங்கை மீட்டது. மேலும், இயந்திரக் கோளாறு ஏற்பட்ட 'ஐரிஸ் புஷேர்' என்ற இரண்டாவது கப்பலில் இருந்த 208 கடற்படையினரை இலங்கை காப்பாற்றியது. 

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் இரு கப்பல்களின் கடற்படையினரையும் ஒரு சிறப்பு விமானம் மூலம் வெளியேற்றப்பட்டனர் என்று ஜெயசேகரா ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். 

தற்போது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள ஐரிஸ் புஷேர் கப்பலில், சுமார் 8-10 ஈரானிய கடற்படையினர் இன்னும் இருப்பதாக ஜெயசேகர தெரிவித்தார்.  

ஈரானிய மாலுமிகள் நாடு திரும்புவதற்கு முன்னர், இலங்கை அவர்களை இலங்கை இராணுவ முகாம்களில் தங்க வைத்திருந்தது. 

183 மாலுமிகளுடன் சென்ற மற்றொரு ஈரானியக் கப்பலான ஐ.ஆர்.எஸ். லவான், மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவில் நங்கூரமிட்டது. அக்கப்பலில் இருந்த 100க்கும் மேற்பட்ட கடற்படையினர் அதன் பின்னர் இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். 

No comments