கோடீஸ்வரர்களாகும் ஜேவிபி தலைவர்கள்!
தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரும் விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சருமான கே. டி. லால் காந்தா தீடீர் கோடீஸ்வரனாகியமை இலங்கை அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.
அமைச்சரிற்கு சொந்தமான கடுவெலவில் உள்ள ஆடம்பரமான புதிய வீடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, 'ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி' அமைப்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை அளித்துள்ளது.
எந்த வேலையோ அல்லது தொழிலோ இல்லாமல், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக நாட்டிற்கு சேவை செய்து, முழுநேர அரசியலில் ஈடுபட்டிருக்கும் வேளையில், ஆடம்பரமான வீட்டை கட்டியிருப்பது சட்டவிரோத நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட சொத்தா அல்லது உண்மையில் அவரது நியாயமான சொத்துக்கள் மற்றும் உடைமைகளின் அடிப்படையில் பெறப்பட்டதா என்பதில் சந்தேகம் உள்ளது.
விசாரணை நடத்தவும், ஆண்டுதோறும் இலஞ்ச ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளில்; சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் குறிப்பிடவும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேசிய மக்கள் சக்தியின் மின் சக்தி அமைச்சரும் நிலக்கரி மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment