கிளிநொச்சி கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்


கிளிநொச்சி கடல் எல்லையான இரணைதீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் பயணித்த படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் ஊடாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது  10 மீனவர்களையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

No comments