மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாரிய திட்டங்கள் தம்மிடம் உள்ளதாம்


“மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக, மக்களிடையே இம்முறை புத்தாண்டு உற்சாகம் காணப்படவில்லை.

மக்கள் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மத்தியிலேயே புத்தாண்டை எதிர்கொண்டுள்ளனர்.

இம்முறை மே தினம் வெசாக் போயா தினத்தில் வருவதால், அரசியல் ரீதியிலான மே தின ஊர்வலங்கள் அல்லது கூட்டங்களை நடத்தப் போவதில்லை 

மே தினத்துக்குப் பதிலாக அன்றைய தினம் நாம் ‘சில்’ காத்தல் மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம். 

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் இணைந்து மே தினத்தைக் கொண்டாடப் போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை. நாம் அவர்களுடன் இணைந்து செயற்படப் போவதில்லை என தெரிவித்தார். 

அதன் போது, புதிய ஆண்டில் அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மஹிந்த நிச்சயமாக மாற்றங்கள் நிகழும்.

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய அளவிலான திட்டத்தைத் கட்சி வைத்துள்ளது. வரவிருக்கும் எந்தவோர் அரசியல் சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார். 


No comments